தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வரும் விஜய், அஜித் நண்பர்களாக பழகி வருகின்றனர். ஆனால் இவர்களது ரசிகர்கள் எப்போதும் எலியும், பூனையுமாக இருக்கின்றனர். குறிப்பாக ட்விட்டரில் இவர்கள் ஒரு போரே நடத்துவார்கள். இதுபோல் செய்ய வேண்டாம் என்று பல முறை நடிகர்கள் அறிவுறுத்தியும் தொடர்ந்து அவர்கள் ட்விட்டரை போர்க்களமாக மாற்றிவருகின்றன.. அதிலும் சிலரோ மற்ற நடிகர்களையும், டேக் செய்து தவறான பதிவுகளை வெளியிடுவதாக கூறப்படுகிறது.
’அஜித், விஜய்.... இதை செய்தால் பிளாக் செய்யப்படும்’- விவேக் - அஜீத், விஜய்
சென்னை: அஜீத், விஜய் அல்லது எந்த நடிகரையும், தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “நண்பர்கள் அஜித், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை. என்னை டேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மீறி செய்தால் பிளாக் செய்யப்படும். நேர்மறை பதிவுகளுக்கே நான் ட்விட்டரைப் பயன்படுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள்': தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்த ராகவா லாரன்ஸ்!