இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் 'பேராண்மை' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்னும் படத்தை இயக்கி வருகிறார். சந்திரா ஆர்ட்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தின் கதையில் சர்வதேச அளவிலான பிரச்னையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை பழனியில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் தொடங்கி வைத்தார். தற்போது நகைச்சுவை நடிகர் விவேக் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுவே விஜய் சேதுபதி - விவேக் கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.