தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'புத்தாண்டு பாசிடிவ் ரிசல்ட்டுடன் தொடங்கியுள்ளது' - விஷ்ணு விஷால் உருக்கம் - விஷ்ணு விஷாலுக்கு கரோனா

நடிகர் விஷ்ணு விஷால், தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

By

Published : Jan 9, 2022, 7:10 PM IST

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இதில் சினிமா நட்சத்திரங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் கமல்ஹாசன், வடிவேலு ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மீண்டனர்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், "2022ஆம் ஆண்டு புத்தாண்டு கரோனா பாசிடிவ் ரிசல்ட்டுடன் தொடங்கியுள்ளது. என்னுடன் கடந்த வாரம் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.

எனக்குப் பயங்கரமான உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை வலி, காய்ச்சல் இருந்தது. இதிலிருந்து நான் விரைவில் மீண்டு வருவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாள்களில் மட்டும் ஷெரின், சத்யராஜ், இசையமைப்பாளர் தமன், மகேஷ் பாபு, திரிஷா, அருண் விஜய், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நடிகர் சத்யராஜுக்கு கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details