நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'வீரமே வாகை சூடும்' படத்தை அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கியுள்ளார். இதில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர். மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி. வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. திமிரு, சண்டைக்கோழி, தாமிரபரணி உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, 11ஆவது முறையாக விஷால் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.