சென்னை:நடிகர் விஷால் இன்று (ஆக.29) தனது பிறந்தநாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், இந்த இல்லம் புனிதமான இடம் என்பதால் பிறந்தாள் கொண்டாட தான் இங்குவந்துள்ளதாகவும், பிறந்தநாளன்று நிறைய நல்ல விஷயங்கள் நடப்பதால் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.
வைகைப் புயலுக்கு வாழ்த்து
தொடர்ந்து, தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த விஷால், ஒரு ரசிகனாக நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க வருவதை வரவேற்பதாகவும், அவர் நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.