ஆனந்த் சங்கர் எழுதி இயக்கி, மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் 'எனிமி'. இதில் ஆர்யாவும், விஷாலும் நாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் மிருனாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ளார். 'எனிமி' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடந்து முடிந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் விஷால் படத்திற்கு டப்பிங் பேசும் காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "தெலுங்கில் நான் டப்பிங் பேசுவதற்குப் பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்" எனக் குறிப்பிட்டுள்ளார். 'எனிமி' திரைப்படம் வரும் அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க:அடேங்கப்பா 14 வாரங்களுக்கு இவ்வளவு கோடியா? சல்மானின் சம்பளம் கேட்டு ரசிகர்கள் ஷாக்!