தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் முறையாகப் பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும், திரைப் பிரபலங்களும் நேரில் சந்தித்தும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஷால் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து கூறிய நடிகர் விஷால்! - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து கூறிய நடிகர் விஷால்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்று இருக்கும் மு.க.ஸ்டாலினை நடிகர் விஷால் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
![முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து கூறிய நடிகர் விஷால்! Vishal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11686680-894-11686680-1620473568629.jpg)
இந்தச் சந்திப்புக்குப் பின் விஷால் கூறியதாவது,"முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து சொன்னேன். அத்துடன் நடிகர் சங்கத்தின் இன்றைய நிலைமையும் எடுத்து கூறினேன். எத்தனை கலைஞர்கள் பென்ஷன் கிடைக்காமல், மருந்து வாங்கக் கூட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றியும் விளக்கினேன்.
இன்றையச் சூழலில் கரோனாவில் இருந்து முதலில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, கண்டிப்பாக ஆவன செய்வதாக உறுதி அளித்தார். அத்துடன் கவனமாக இருக்கவும் என்னை அறிவுறுத்தினார். அதே போன்று முதன் முதலாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து வாழ்த்துக் கூறினேன்" என்றார்.