நடிகர் விஷால் ஆர்யாவுடன் இணைந்து 'எனிமி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. இதனைடுத்து விஷால் புதுமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்காலிகமாக '#விஷால் 31' என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.