சென்னை கே.கே. நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ராஜகோபால் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, " பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னை மிகவும் வருத்திற்குள்ளாகியது. அந்தப் பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைத்தது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் ஒருவரும் ஒரு முறைகூட மன்னிப்பு கோரவில்லை.