ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழ்நிலையில் மருத்துவர்களும், காவல்துறையினரும் தொடர்ந்து பணியில் இருந்துவருகின்றனர். பணியில் இருக்கும் காவல்துறையினருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் குணமாகி வரவேண்டும் என்றும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் திரை பிரபலங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
கரோனா பாதித்த காவல்துறை: கான்ஃபிடன்ஸ் கொடுத்த நடிகர் வினய் - காவல்துறைக்கு நன்றி தெரிவித்த வினய்
கரோனா தொற்று பாதித்திருக்கும் காவல்துறையினர் விரைவில் நோயில் இருந்து குணமாகி வர வாழ்த்தி நடிகர் வினய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், நடிகர் வினய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'தமிழ்நாடு காவல்துறையினருக்கும், மருத்துவப் பணியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தியாக மனப்பான்மையோடு உங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து பணியை செய்கிறீர்கள் அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு காவல்துறையினர் பலர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதை நான் அறிகிறேன். நீங்கள் விரைவாக குணமடைந்து வர இறைவனை பிரார்த்திக்கிறேன். பாதுகாப்பாக இருங்கள் மன உறுதியுடன் இருங்கள்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க... அவர் சம்பளத்தை குறைத்தது பெரிய விஷயம் அல்ல, இதுதான் பெரிய விஷயம் - நவீன்