தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நேரம் வந்துவிட்டது... சகாப்தம் அழைக்கிறது - ட்வைன் ஜான்சனுக்கு தூதுவிட்ட வின் டீசல் - ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் இறுதி பாகம்

உலகமே எதிர்பார்க்கும் 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' இறுதி பாகத்தில் நடிகர் ட்வைன் ஜான்சன் நடிக்குமாறு நடிகர் வின் டீசல் சமூகவலைதளம் வாயிலாக அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Vin Diesel
Vin Diesel

By

Published : Nov 9, 2021, 2:45 PM IST

உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் திரைப்படம் 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்'. கடந்த 2001ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது.

அதிரடி சண்டைக் காட்சிகள், அட்டகாசமான கார் ரேஸ்கள், அமர்க்களமான கார் கடத்தல் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம், ப்ளாக்பஸ்டர் வரிசையில் இணைந்தது.

இந்தத் திரைப்பட சீரிஸில் 'ராக்' எனப்படும் ட்வைன் ஜான்சன் நடித்த இணைய படத்தின் வசூல் பலமடங்கு உயர்ந்தது. இந்தப் படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

'மார்வல்', 'ஹாரி பாட்டர்' போல 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' திரைப்பட வரிசைக்கும் இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் ஒன்பதாம் பாகம் 'எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா' இந்தாண்டு ஜூன் 25ஆம் தேதி வெளியானது.

ட்வைன் ஜான்சனின் பங்கு

'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படத்தின் ஆறாவது பாகத்தில் ட்வைன் ஜான்சன் (தி ராக்) ஹாப்ஸ் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரேவற்பை பெற்றதையடுத்து இந்த கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக வைத்து ஹாப்ஸ் அண்ட் ஷா என்ற படமும் வெளியானது. இப்படமும் வசூலை வாரிக் குவித்தது.

இதற்கிடையில், வின் டீசலுக்கும் ட்வைன் ஜான்சனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படவே 'எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா' படத்தில் ட்வைன் ஜான்சன் நடிக்கவில்லை.

இந்நிலையில், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் இறுதி பாகத்தில் ட்வைன் ஜான்சன் நடிக்க வின் டீசல் தனது சமூகவலைதளம் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து வின் டீசல் கூறிருப்பதாவது, "தம்பி ட்வைன் ஜான்சன், நேரம் வந்துவிட்டது. ஃபாஸ்ட் படவரிசையின் இறுதி படத்துக்கு உலகமே காத்திருக்கிறது. என் வீட்டில் குழந்தைகள் உன்னை அங்கிள் ட்வைன் என்று அழைப்பதை நீ அறிவாய்.

நீயும் அவர்களுக்கு வாழ்த்துகளை அனுப்பாத விடுமுறை நாள்களே கிடையாது. ஆனால், நேரம் வந்துவிட்டது. சகாப்தம் அழைக்கிறது. பாப்லோவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நான் நிறைவேற்ற போகிறேன் என பல ஆண்டுகளுக்கு முன்பே உன்னிடம் கூறியிருந்தேன்.

இறுதி பாகத்தில் மிகச் சிறப்பான பங்கை நாம் அளிப்போம் என்று நான் உறுதி அளிக்கிறேன். இது அன்பின் வெளிப்பாடு என்று சொல்வேன். ஆனால், நீ வர வேண்டும். நீ நடிக்க ஒரு முக்கியமான கதாபாத்திரம் காத்துக்கொண்டிருக்கிறது. இந்த படவரிசையை விட்டுச் சென்று விடாதே.

ஹாப்ஸ் பாத்திரத்தை வேறு யாராலும் நடிக்க முடியாது. நீ வழக்கத்தை விடச் சிறப்பாக நடித்து உன்னுடைய சாதனையை அடைவாய் என நம்புகிறேன்" என வின் டீசல் கூறியுள்ளார்.

வின் டீசலின் இந்த அழைப்பை ட்வைன் ஜான்சன் ஏற்பாரா அல்லது புறக்கணிப்பாரா எனப் பொறுத்திருந்து பார்போம்.

இதையும் படிங்க: முடிவுக்கு வரும் 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' சகாப்தம்: வின் டீசல் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details