தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சுஜித் இறப்பு ஒரு பாடம்' - நடிகர் விமல் வேதனை - சுஜித்தின் இறப்பு ஒரு பாடம்

திருச்சி: குழந்தை சுஜித்தின் இறப்பு நமக்கெல்லாம் ஒரு பாடம் என நடிகர் விமல் உருக்கமாகப் பேசியுள்ளார்.

actor-vimal

By

Published : Oct 29, 2019, 12:52 PM IST

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்துக்காக தமிழ்நாடே கண்ணீர் வடிக்கிறது. அழுது அழுது தேம்பிய உள்ளங்களின் பிரார்த்தனை வீண்போனது.

சுஜித் இறப்பை அடுத்து பல்வேறு தரப்பினரும் குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே சுஜித்தின் இறுதிச்சடங்கில் நடிகர் விமல் பங்கேற்றார். அதன் பின்னர் நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய அவர், 'சுஜித்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. சுஜித் மீண்டுவந்த நம் அனைவரையும் பார்ப்பான் என நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால் ஏமாற்றமாகவே முடிந்திருக்கிறது.

நடிகர் விமல் செய்தியாளர் சந்திப்பு

சுஜித் மூலமாக இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இனிமேல் இதுபோன்று நடக்காமல் இருக்க விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க...

மனதை தேற்றிக்கொள்கிறேன்... நீ கடவுளின் பிள்ளை! - விஜயபாஸ்கர் உருக்கம்!

ABOUT THE AUTHOR

...view details