தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகர் விக்ரமிற்கு கரோனா தொற்று - நடிகர் விக்ரம் புதிய திரைப்படங்கள்

நடிகர் விக்ரமிற்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில், அவருக்கு காரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம்

By

Published : Dec 16, 2021, 2:51 PM IST

Updated : Dec 16, 2021, 3:43 PM IST

சென்னை: நடிகர் விக்ரமிற்கு ஒரு வார காலமாக லேசான காய்ச்சல் இருந்துவந்த நிலையில், அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துள்ளார். இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தன்னை அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது தரப்பில், லேசான அறிகுறி என்பதால் மருத்துவர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொள்ள அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் கமல் ஹாசனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பா. ரஞ்சித்துடன் இணையும் விக்ரம்; விரைவில் சியான் 61 படப்பிடிப்பு

Last Updated : Dec 16, 2021, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details