தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முதலமைச்சர் பொது நிவாரணநிதி: நடிகர் விக்ரம் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

சென்னை: வங்கிப் பணப்பரிவர்த்தனை மூலம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் 30 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

Vikram
Vikram

By

Published : May 17, 2021, 3:23 PM IST

Updated : May 17, 2021, 3:32 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களைச் சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முதலமைச்சரின் இந்த வேண்டுகோளையடுத்து வெளிநாடு தமிழர்கள், திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், திரைப்பட நடிகர் விக்ரம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 30 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இந்தத் தொகையினை விக்ரம் வங்கிப் பணப்பரிவர்த்தனை மூலம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு செலுத்தியுள்ளார்.

Last Updated : May 17, 2021, 3:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details