'இமைக்கா நொடிகள்' பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிவரும் திரைப்படம் ’கோப்ரா’. விக்ரம் நடித்துவரும் இப்படத்தில் ’கேஜிஎஃப்’ படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.