'மாநகரம்', 'கைதி' போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கியுள்ளார். ராக்ஸ்டார் அனிரூத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் பாடல்கள், டீசர் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
கரோனா ஊரடங்கு காரணமாக, இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளி போன நிலையில், தற்போது வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.