தமிழ் சினிமாவில் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் விஜய். இவரது மகன் சஞ்சய் விஜயை உரித்து வைத்தவர் போல் இருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கிய 'ஜங்ஷன்' குறும்படம் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். தந்தை நடிகராக இருந்தாலும் மகனுக்கு தாத்தாவை போல் இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டுள்ளது. த்ரில்லர் படமாக இருந்தாலும் இவரது நடிப்பை அனைவரும் பாராட்டினர்.
விஜய் மகன் சஞ்சயின் வைரல் புகைப்படம்! - viral photo
தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வரும் நடிகர் விஜயின் மகன் சஞ்சயின் ஸ்மார்ட்டான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, அண்மையில் தொகுப்பாளராக மாறி இயக்குநர் ஆனந்த் சங்கரை நேர்காணலும் செய்தார். சமீபகாலமாக யூடியூப் மற்றும் குறும்படங்களில் காணப்படும் ஜேசன் சஞ்சய் எப்போது திரையில் கால்பதிப்பார் என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில், அவரது புதிய லுக் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பார்க்க சின்ன பையன் போல் தெரிந்தவர் ஸ்டைலிஷாக மாறியுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதைப் பார்த்தவர்கள் விஜயை பார்த்ததுபோல் இருக்கின்றது என தெரிவித்துவருகின்றனர்.