தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

"ரசிகர்களுக்கு விஜய் தந்த மெர்சலான சர்ப்ரைஸ்" - வெறித்தனம்

'பிகில்' படத்தில் நடிகர் விஜய் வெறித்தனமாக பாடியிருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ள செய்தி, ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிகில்

By

Published : Jul 9, 2019, 8:32 AM IST

Updated : Jul 9, 2019, 9:21 AM IST

தெறி, மெர்சல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் -அட்லி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப் விவேக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

பெரும் பொருட்செலவில் ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், அப்படத்தின் அப்டேட் செய்திகள் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 21ஆம் தேதி படத்தின் பெயரோடு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் விஜய் அப்பன், மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியானது.

இந்நிலையில், பாடலாசிரியர் விவேக் வரிகளில் விஜய் 'வெறித்தனம்' என்னும் பாடலை பாடுகிறார். இதுகுறித்து ட்விட் செய்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நடிகர் விஜய் வெறித்தனம் பாடலை பாடியிருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்காக விஜய்க்கு நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விஜய், அட்லி, ஏ.ஆர்.ரஹ்மான், விவேக் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தப்புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Last Updated : Jul 9, 2019, 9:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details