தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இடிமுழக்கம் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி: வைரலாகும் புகைப்படம் - ஜிவி பிரகாஷின் இடிமுழக்கம்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் 'இடிமுழக்கம்' படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு விஜய் சேதுபதி  சென்று படக்குழுவினரைச் சந்தித்தார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

By

Published : Aug 24, 2021, 8:07 AM IST

விஜய் சேதுபதியை வைத்து 'மாமனிதன்' படத்தை இயக்கி முடித்த சீனு ராமசாமி, அடுத்ததாக இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷை வைத்து 'இடி முழக்கம்' என்னும் படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஆக்ஷன் ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் இப்படத்தைத் தயாரித்துள்ளார். வைரமுத்து பாடல் எழுத ரகுநந்தன் இசையமைத்துள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தேனி, கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

தற்போது அடுத்த கட்டமாக புதுச்சேரியில் இடிமுழக்க படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. புதுச்சேரியில் வேறொரு படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி இந்தச் செய்தியை அறிந்து இடிமுழக்கம் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று படக்குழுவினரைச் சந்தித்தார். விஜய் சேதுபதியின் இந்தச் சந்திப்பின்போது சீனு ராமசாமி, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்பில் விஜய் சேதுபதி தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், இயக்குநர் சீனு ராமசாமி ஆகியவர்களோடு முக்கிய விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details