அறிமுக இயக்குநர் ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்த படம் 'கிரிமினல்'. இப்படத்தை கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் தயாரித்து நாயகனாக நடித்துள்ளார். இவருடன் அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடித்துள்ளார்.
கிரிமினல் படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது, "நாயகனின் அப்பா கொலை செய்யப்பட, அந்தக் கொலைப்பழி நாயகன் மீது விழுகிறது. ஒரு பக்கம் போலீஸ் துரத்த, மறுபக்கம் தனது தந்ததையைக் கொலை செய்த உண்மையான கொலையாளியைப் பிடித்து, தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் முயற்சியில் நாயகன் இறங்குகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில், சஸ்பென்ஸாகவும், த்ரில்லராகவும் சொல்லியிருக்கிறார்கள்" எனத் தெரிவித்தனர்.