கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ். இவர் விவசாயம் செய்வதற்குப் பணம் இல்லாததால் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
இதையடுத்து, பிரகாஷ் தனக்கு தெரிந்த நபர்களின் பரிந்துரைக்கிணங்க கள்ளக்குறிச்சி விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தை அணுகி தனது பிரச்னையை முறையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றத்தினர், உழவு செய்வதற்கான முழு செலவையும் ஏற்று அவருடைய நிலத்தில் விவசாயம் செய்துகொடுக்க உதவியது.
தற்போது அந்த நிலத்தில் பயிர் நன்றாக வளர்ந்துள்ள நிலையில், அந்த விவசாயி தன் நிலத்திலிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் தனது நிலத்தில் பயிர்கள் பசுமையாக வளர்ந்துள்ளது என்றும் அதற்கு காரணமான விஜய் சேதுபதிக்கும் அவரின் ரசிகர் நற்பணி மன்றத்திற்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தன்னைப்போல ஏராளமான விவசாயிகள் அவதிப்பட்டுவருவதாகவும், இதைப்போன்று அனைத்து ரசிகர்களும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: வன்முறைகளை குறைத்துக்கொள்ளுங்கள்! - இயக்குநர்களுக்கு அறிவுறுத்திய பாரதிராஜா