விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்தப் பாடலில் விஜய் தோள்பட்டையை சற்று சரித்து குலுக்கி ஆடும் நடன அசைவு சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்தப் பாடலுக்கு கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி பிரபலங்கள், நெட்டிசன்கள் வரை நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவிட உலகம் முழுவதும் இந்தப் பாடல் கவனத்தை ஈர்த்தது.
'மாஸ்டர்' படத்தில் 'பவானி' கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது ரசிகர்கள் அவரை 'வாத்தி கம்மிங் 'பாடலுக்கு நடனம் ஆடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க விஜய் சேதுபதி நடனமாடினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: விஜய் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட 'சார்பட்டா' டான்சிங் ரோஸ்