சென்னை: இசையமைப்பாளர் அம்ரீஷ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
'நானே என்னுள் இல்லை' என்ற படம் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கிய இசையமைப்பாளர் அம்ரீஷ், மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்ளின் 2, பொட்டு, சத்ரு போன்ற படங்களுக்கு இசையமைத்தார். தற்போது கர்ஜனை, யங் மங் சங், வீரமாதேவி, பரமபத விளையாட்டு, கா ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.இவரது பிறந்தநாளை அவரது தாயும், நடிகையுமான ஜெயசித்ரா பிரமாண்டமாக கொண்டாடினார்.