வித்தியாசமான நடிப்பாலும், கதைத் தேர்வாலும், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தவர் விஜய் சேதுபதி. தற்போது இவரது நடிப்பில் 'சிந்துபாத்' திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.
'ஐயோ அதை நான் கூறவே இல்லை' - பதறிய விஜய் சேதுபதி! - 2019தேர்தல்
கோவை: ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தான் கூறவில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோவை காந்திபுரம் நூறடி சாலையில் உள்ள ஜோயாலுக்காஸ் நகை கடை திறப்பு விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு, கடையினை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "நேற்று மதுரையில் நான் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கூறவில்லை. யாரும் அதை திரித்துக் கூற வேண்டாம். தேர்தல் முடிவுகளை எல்லோரையும் போல் நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்றார்.