நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மாஸ்டர் திரைப்படத்தால் திரையரங்கு உரிமையாளர்கள் உற்சாகமடைந்தனர். இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், அண்மையில் அமேசான் பிரைமில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.
பனையூரில் ரசிகர்களுடன் திடீர் சந்திப்பு நடத்திய விஜய்! - வைரலாகும் வீடியோ
சென்னை: நடிகர் விஜய் நேற்று (பிப்.07) அவருடைய ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
master vijay
இந்நிலையில், சென்னையில் உள்ள பனையூர் அலுவலகத்தில் விஜய் தனது ரசிகர்கள்களை சந்தித்தார். ஆனால், எதற்காக இந்த சந்திப்பு என்ற தகவல் வெளியாகவில்லை. பல மாதங்கள் கழித்து விஜயை நேரில் சந்தித்ததினால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:பொய் குற்றச்சாட்டு சுமத்திய ஸ்டாலின் மீது வழக்கு தொடர்வேன் - அமைச்சர் கடம்பூர் ராஜூ