சமூக இடைவெளியை முன்னிருத்தும் விதமாக நடிகர் விஜய் உள்ளிட்ட மாஸ்டர் குழுவினர்களோடு வீடியோ கால் மூலம் பேசியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.
கரோனா தொற்று பரவாமல் தற்காத்துக்கொள்வதற்கு சமூக இடைவெளி என்பது மிகவும் முக்கியமானது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
இதையடுத்து, நடிகர் விஜய், இசையமைப்பாளர் அனிருத், மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோருடன் வீடியோ கால் பேசியுள்ள படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன், "மாஸ்டர் குழுவினர் சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனர். நீங்கள் செய்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக 'மாஸ்டர்' படத்தின் 'குட்டி ஸ்டோரி' பாடல் வரி ரெபரன்ஸுடன், வீடியோ சாட் செய்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்து, "வெளியே சந்தித்து பேச முடியாமல் போனால், எங்களது சந்திப்பு இப்படித்தான் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.