சென்னை:தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி அக். 6, 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டன. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இதனிடையே பாமக, தேமுதிக, மநீம கட்சிகள் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.