தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அடுத்தடுத்து வெளியாகும் விஜய்யின் 'பீஸ்ட்' ஹாட்ரிக் அப்டேட்?

விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'பீஸ்ட்' படம் குறித்தான மூன்று அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

beast
beast

By

Published : Oct 5, 2021, 1:17 PM IST

'மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துவரும் படம், 'பீஸ்ட்'. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாகத் தயாரித்துவருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

'பீஸ்ட்' படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் மேற்கொள்ள இருப்பதாகவும் அங்கு விஜய் வில்லனுடன் மோதும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தெரிகின்றது.

இந்நிலையில், 'பீஸ்ட்' படக்குழு அடுத்தடுத்து மூன்று அப்டேட்டுகளை வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டேபர் 13ஆம் தேதி பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளாக இருப்பதால் அன்றைய நாள் அவரது கதாபாத்திரம் குறித்தான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனத் தெரிகிறது.

அதையடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என இரண்டு விடுமுறை நாள்களான அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் 'பீஸ்ட்' படத்தின் இரண்டு முக்கிய அப்டேட்கள் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக 'பீஸ்ட்' படத்தின் டைட்டிலுடன் கூடிய விஜய் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'போக்கிரி' ஸ்டைலில் ஒரு ஓப்பனிங் - 'பீஸ்ட்' படக்குழு ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details