இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது விஜய் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்றது.
இப்படத்தில் விஜயை விட வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. மேலும் இது விஜய் சேதுபதி படம் என்றே சிலர் கூறிவருகின்றனர்.