விஜய் -அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'பிகில்'. கால்பந்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில், நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு, ஷாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின், முதல், இரண்டாம், மூன்றாம் போஸ்டர்கள் வெளியாகி பயங்கர வரவேற்பை பெற்றது. இதனை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
விஜய் ரசிகர்களுக்கு 'பிகில்' படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்! - சிங்கப்பெண்ணே
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சிங்கப் பெண்ணே' பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
வடசென்னை பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியலை காட்டும் படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய 'சிங்கப்பெண்ணே... ஆண் இனமே உன்னை வணங்கிடுமா... என்ற பாடல் வலைதளத்தில் லீக்கானதால் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஏ. ஆர்.ரஹ்மான் மிகுந்த அப்செட் ஆனதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இப்பாடலை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தி அறிந்த விஜய் ரசிகர்கள், இப்பொழுதே ட்ரெண்டிங்கில் இணையத்தை கலங்கடித்து வருகின்றனர். 'பிகில்' திரைப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் படப்பிடிப்பு நிறைவடைகிறதாம்.