தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சொகுசு கார் வரி வழக்கு: நடிகர் விஜய் மேல்முறையீடு? - Actor Vijay appeals car taxation case

சொகுசு கார் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய், Actor Vijay appeals car taxation case
நடிகர் விஜய்

By

Published : Jul 15, 2021, 9:26 PM IST

Updated : Jul 15, 2021, 9:32 PM IST

சென்னை: நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்களிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும், வரி என்பது நன்கொடை அல்ல பங்களிப்பு என்றும், நீங்கள் நிஜ ஹீரோவாக இருங்கள் என்றும் கூறி ஒரு லட்சரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வருத்தமளிக்கும் தீர்ப்பு

'இந்த விவகாரத்தில் வரி ஏய்ப்பு என்பதே இல்லை. நாங்கள் வரி செலுத்தத் தயார். ஆனால் வருத்தமளிக்கும் விதமான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு போகிறோம்' என்று நடிகர் விஜய்யின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் கார் சர்ச்சை: ஆதரவுக்கரம் நீட்டிய ஓபிஎஸ் இளைய மகன்

Last Updated : Jul 15, 2021, 9:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details