"கிழக்குச் சீமையிலே" படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விக்னேஷ். இவரது நெருங்கிய நண்பர் பாலா இயக்கிய சேது படத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பை தவறவிட்டதை இன்று வரைகூறி புலம்பி வருகிறார். அவர் செய்து வரும் தொழிலில்வெற்றிக்கொடி கட்டி வந்தாலும், தமிழ் சினிமாவில் தன்னால் ஜொலிக்க முடியவில்லை என்ற எண்ணம் ஆறாத வடுவாய் இருக்கிறது. இதற்கிடையில், ஒரு சில படங்களை தயாரித்து நஷ்டமடைந்தார். இதனால் அவரது குடும்பத்தில் பல பிரச்னைகளும் ஏற்பட்டது.
‘அண்ணன் டிடிவி தினகரனை ஜெயிக்க வைப்போம்’ - நடிகர் விக்னேஷ் - டிடிவி தினகரன்
நடிகர் விக்னேஷ் டிடிவி தினகரனை ஜெயிக்க வைக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
![‘அண்ணன் டிடிவி தினகரனை ஜெயிக்க வைப்போம்’ - நடிகர் விக்னேஷ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2716701-374-b206617d-9138-4a96-80c7-aaf428d97ac6.jpg)
இந்நிலையில், மக்களவைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவையில் இருக்கும் அனைத்துத்தலைவர்களும் நடக்க இருக்கும் மக்களவைத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அமமுக-விற்கு ஆதரவுதெரிவித்து பிரசாரம் செய்வார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், "தான் நடிகராக இருந்தாலும் அண்ணன் டிடிவி தினகரனை ஜெயிக்க வைக்க எனது தலைமையில் குறிஞ்சியர் சமூக நீதிப்பேரவை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத்தயாராக இருக்கிறது" எனக் கூறிய விக்னேஷ்,இந்தத்தேர்தலில் டிடிவி வெற்றிப்பெறுவது உறுதி என்றும் தெரிவித்தார்.