அந்தக் காணொலியில் அவர், எங்க குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர் ஒருவருக்கு காய்ச்சல் வந்தது, சுவாசக் கோளாறு ஏற்பட்டு கரோனா இருப்பது உறுதியானது. ஆனால் அவருக்கு எந்த மருத்துவமனையிலும் படுக்கை இல்லை. அரசு அலுவலர்கள், மருத்துவமனை உரிமையாளர்கள் என பலரிடம் பேசிப் பார்த்தோம், அப்போதும் படுக்கை கிடைக்கவில்லை.
மருத்துவமனைக்கு அழைத்து வந்து என்ன செய்வது? - எச்சரிக்கும் வரதராஜன் - நடிகர் வரதராஜன்
கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திவரும் வேளையில், தமிழ்நாட்டில் மருத்துவ வசதிகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து நடிகர் வரதராஜன் ஒரு காணொலியை பகிர்ந்துள்ளார்.
Actor Varadarajan warns tn people
மருத்துவமனைக்கு அழைத்து வராதீர்கள், அழைத்து வந்து என்ன செய்வது என கேட்கிறார்கள். அவருக்கு எப்படி கரோனா வந்தது என தெரியவில்லை. அந்தக் குடும்பம் பட்ட துயரத்தைப் பார்த்து கலங்கிவிட்டேன். யாரும் தனக்கு கரோனா பாதிப்பு வராது என எச்சரிக்கை உணர்வற்று இருக்க வேண்டாம். அதனால் தயவுசெய்து யாரும் வெளியே செல்லாதீர்கள், பத்திரமாக இருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி வெட்டிக் கொலை