இயக்குநர் பாரி.கே. விஜய் இயக்கத்தில் நடிகர் வைபவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் 'ஆலம்பனா'. இத்திரைப்படம் பேண்டஸி ஜானரில் உருவாகவுள்ளது. கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸும் தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக பார்வதி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி ஷர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
வைபவின் 'ஆலம்பனா' படப்பிடிப்பு நிறைவு! - latest Tamil Cinema news
சென்னை: வைபவ் நடிப்பில் உருவாகிவந்த 'ஆலம்பனா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
![வைபவின் 'ஆலம்பனா' படப்பிடிப்பு நிறைவு! vaibhav](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10457195-796-10457195-1612166676924.jpg)
vaibhav
இன்றைக்கு உள்ள குழந்தைகளுக்கு அலாவுதீன் பூதம் பற்றி எடுத்துக்கூறும் வகையில் ஆலம்பனா படம் தயாராகிறது. இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் கவனம் ஈர்க்கக்கூடிய படமாக பேண்டஸி கான்செப்ட்டோடும் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் தயாராகிறது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 1) நிறைவடைந்தது. இதனையடுத்து இறுதிகட்ட பணிகளுக்குப் படக்குழுவினர் தயாராகிவருகின்றனர்.