தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் திரைப்பயணத்தை தொடங்கும் வைகைப்புயல்: ஓடிடியில் வடிவேலு - வடிவேலு திரைப்படங்கள்

சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலு இணைய தொடர் வழியாக மீண்டும் தனது திரைப் பயணத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

vadivelu
vadivelu

By

Published : Aug 6, 2021, 9:27 PM IST

வைகைப்புயல் வடிவேலு தனது நகைச்சுவை மூலம் தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வந்தவர். சிம்புதேவன் இயக்கத்தில் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

இதற்கிடையில், நடிகர் விஜயகாந்த் உடன் வடிவேலுக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

அதன்பிறகு வடிவேலுவுக்கு இறங்குமுகம் தான். பட வாய்ப்புகளும் குறையத்தொடங்கியன. இதனால் இழந்த மார்க்கெட்டை மீட்க மீண்டும் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தின் இரண்டாவது பாகமான 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரிக்கிறார்.

இப்படத்தின் கதை விவாதம், தயாரிப்பாளருடன் வாக்குவாதம் போன்ற பிரச்சினைகளில் வடிவேலு ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக படம் கைவிடப்பட்டது. இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதால் சம்பளத்தை திருப்பித்தருமாறு வடிவேலுவிடம் இயக்குநர் ஷங்கர் கேட்டுள்ளார்.

இப்பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. இதன்காரணமாக வடிவேலு தமிழ் சினிமாவில் நடிக்க, நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கத்தின் மூலம் ரெட் கார்டு வழங்கப்பட்டது.

இதனிடையிலும் 'மெர்சல்', 'கத்திச்சண்டை' போன்ற படங்களில் வடிவேலு நடித்தார். ஆனால் காமெடி பெரிதாக பேசப்படவில்லை. இந்நிலையில், தற்போது ஓடிடி காலம் என்பதால் வடிவேலுவை இணைய தொடர்களில் நடிக்க வைக்க பல்வேறு ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

கடந்த சில வருடங்களாக இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆஹா எனும் ஓடிடி தளத்தை தமிழில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்.

இதில் வடிவேலு போன்ற புகழ்பெற்ற ஒருவர் நடித்தால் ஓடிடி தளம் மிகப்பெரிய அளவில் அறிமுகம் கிடைக்கும் என்பது அவரது எண்ணம். இதனால் இதுகுறித்து வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவரும் தலையசைத்துவிட்டதாகவும் விரைவில் வடிவேலுவை ஓடிடி தளத்தில் காணலாம் என்றும் தகவல் வருகிறது.

இதையும் படிங்க: சமரசம் அடையும் வடிவேலு: மீண்டும் தொடங்கும் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'

ABOUT THE AUTHOR

...view details