நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்! - comedy actor vadivel balaji

13:34 September 10
வடிவேல் பாலாஜி காலமானார்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலக்கி வந்த வடிவேல் பாலாஜி (42) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
நயன்தாரா நடிப்பில் வெளிவந்த "கோலமாவு கோகிலா" உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அவரது இறப்புக்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆசிய திரைப்பட விருதுகளில் அதிகம் பரிந்துரைக்கப்பட்ட ’பாராசைட்’