நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தான் 'எதற்கும் துணிந்தவன்'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் உருவாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
இதில் சூர்யாவுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்தில் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.