தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சூர்யாவின் 'சூரரைப் போற்று' - இந்தியில் ரீமேக்

சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

Soorarai Pottru
Soorarai Pottru

By

Published : Jul 12, 2021, 9:38 AM IST

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சூரரைப் போற்று'. இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, காளிவெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏர் டெக்கான் என்ற பெயரில் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை தொடங்கிய கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் அவரது வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டது. அமேசான் பிரைமில் தீபாவளி வெளியீடாக கடந்தாண்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியானது.

'சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரூ. 100 கோடிக்கும் மேல் ப்ரீ பிசினஸ் செய்து ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்தது. அதுமட்டுமின்றி இந்தாண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் பொதுப் பிரிவில் தேர்வானது. ஓடிடி தளத்தில் 50 மில்லியன் பேர் பார்த்த படம் என்ற சாதனையை 'சூரரைப் போற்று' பெற்றது.

அதுமட்டுமல்லாது ஐஎம்டிபி (IMDb) இணையதளத்தில் உலக அளவில் சிறந்த படமாக மூன்றாவது இடத்தில் உள்ளது. இப்படி சூரரைப் போற்று வெளியான நாள் முதல் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில், சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தியிலும் சுதா கொங்கராவே இயக்கவுள்ளார். சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தியில் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்டுன் இணைந்து தயாரிக்கிறது. விரைவில் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகை, துணை கதாபாத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் உடான் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு அமேசான் பிரைமில் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியானது. தமிழ்த் திரைப்படம் ஓடிடி தளத்தில் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அப்போ 'சூரரைப் போற்று'...இப்போ 'மாஸ்டர்': ஐஎம்டிபியில் சாதனை படைக்கும் தமிழ் படங்கள்

ABOUT THE AUTHOR

...view details