நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இந்திய நீதித்துறை தான் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்கிறது.
நீதித்துறையின் பெருந்தன்மையை ஏற்கிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், கரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என்று கூறியிருந்தார்.
இவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. இந்த கருத்துக்கு எதிராக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முகாந்திரம் இருப்பதாகக் கூறி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.