தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜெய் பீம் - தீபாவளி விடுமுறையைக் குறிவைக்கும் சூர்யா - jai bhim release date

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெய் பீம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெய் பீம்
ஜெய் பீம்

By

Published : Oct 1, 2021, 3:41 PM IST

'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெய் பீம்'. சூர்யாவிம் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தை, ஞானவேல் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் மாபெரும் வரவேற்பைப் பெற்றள்ளது. வழக்கறிஞராக நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இதில் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் 'ஜெய் பீம்' திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றதுவருகிறது.

ஜெய் பீம்

இந்நிலையில் 'ஜெய் பீம்' திரைப்படம் அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு 'சூரரைப் போற்று' படம் திரைப்படமும், தீபாவளி பண்டிகையன்று அமேசான் ஃபிரைம் தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் தல-தளபதியின் முதல் நாயகி!

ABOUT THE AUTHOR

...view details