தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிரித்த முகத்துடன் நீங்கா இடம் பிடித்துள்ள புனித் - நடிகர் சூர்யா - புனித் ராஜ்குமாரின் படங்கள்

எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

suriya
suriya

By

Published : Nov 5, 2021, 12:28 PM IST

பெங்களூரு: கன்னடத் திரையுலகில் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். அக்டோபர் 29ஆம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சிகிச்சைக்காக புனித் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 46.

புனித் ராஜ்குமாரின் உடல் மூன்று நாள்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள காண்டீவரா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது.

சிரஞ்சீவி, வெங்கடேஷ், பால கிருஷ்ணன் உள்ளிட்ட திரைத்துறைய சேர்ந்த பலர் புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் பெங்களூருவில் உள்ள புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில், நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன், ராம் சரண், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

நடிகர் சூர்யா அஞ்சலி

இந்நிலையில், நடிகர் சூர்யா புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின் புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா கூறியதாவது, "புனித் ராஜ்குமாருக்கு இப்படி நடந்திருக்க கூடாது. இதை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் என் அம்மாவின் வயிற்றில் நான்கு மாத கருவாக இருக்கும் போது புனித் ராஜ்குமார் ஏழுமாத கருவாக அவரது அம்மாவின் வயிற்றில் இருந்தார்.

அந்த நேரத்தில் எங்கள் இரு குடும்பமும் சந்தித்துக்கொண்டதாக என் அம்மா என்னிடம் கூறியிருக்கிறார். எங்கள் பந்தம் அப்போதே தொடங்கியது. எந்த புகைப்படங்கள் வீடியோ பார்க்கும் போது புனித் ராஜ்குமார் சிரித்துக்கொண்டே இருப்பார்.

சமூகத்திற்கும் மக்களுக்கும் அவர் பல நல்ல விஷயம் செய்திருப்பதாக நான் கேள்விப்பட்டேன். அவர் எப்போதும் நம் மனதில் சிரித்த முகத்துடன் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: 'ஒரு முறை கூட நேரில் பார்த்ததில்லை' - புனித் நினைவிடத்தில் விஜய்சேதுபதி அஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details