இயக்குநர் செல்வராகவன் - நடிகர் சூர்யா முதன்முறையாக இணைந்து பணியாற்றிய என்.ஜி.கே படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. ஆனால் பல்வேறு பிரச்னைகள் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
'ரசிகர்களே என் வரம்' - நடிகர் சூர்யா உருக்கம் - ட்விட்டர் பதிவு
சென்னை: என்.ஜி.கே திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தனது ரசிகர்களே தனக்கு வரம் என்று நடிகர் சூர்யா ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியது. இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு என்.ஜி.கே படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தொடர்பாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்,
அன்பே தவம், அன்பே வரம். வெற்றி, தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னைத் தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழக் காத்திருக்கிறேன். உங்களுக்கும் இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள் என அந்தப் பதிவில் தனது உணர்வுகளை பதிவுசெய்துள்ளார்.