தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில், சூர்யா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், வீடு திரும்பி தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார்.
சூர்யாவுக்கு கரோனா நெகட்டிவ்! - சூர்யா 40
சென்னை: நடிகர் சூர்யாவுக்கு கரோனா தொற்று பரிசோதனை முடிவில் நெகட்டிவ் வந்துள்ளது.
suriya
இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் சூர்யாவிற்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதனையடுத்து சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு பாண்டிராஜின் படத்தில் சூர்யா கலந்துகொள்ள உள்ளார்.
இதையும் படிங்க:வீடு திரும்பினார் சூர்யா - நடிகர் கார்த்தி ட்வீட்!