இறுதிச்சுற்று படத்துக்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கிவரும் திரைப்படம் 'சூரரைப் போற்று'. இப்படத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவருகின்றனர். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
சூரரைப் போற்று ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - சூரைப் போற்று
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Soorarai Pottru
இதனை நடிகர் சூர்யாவும் குனீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட இருப்பதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தை தெலுங்கில் டப் செய்ய இருப்பதாகவும் படக்குழு முடிவு செய்துள்ளது.