தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பு நிறைவு! - எதற்கும் துணிந்தவன் அப்டேட்

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

ET
ET

By

Published : Nov 10, 2021, 2:36 PM IST

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா தனது 40ஆவது படத்தில் நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சூரி, இளவரசு உள்ளிட்டோர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் போஸ்டர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டவுடன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக இயக்குநர் பாண்டிராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாண்டிராஜ் தனது ட்விட்டரில், " ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டது. சன் பிக்சர்ஸ், நடிகர் சூர்யா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, குழுவினர் அனைவருக்கும் நன்றி. எதற்கும் துணிந்தவன் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: எதற்கும் துணிந்தவன் உண்மை சம்பவமா?

ABOUT THE AUTHOR

...view details