நீட் தேர்வு அச்சம் காரணமாக சமீபத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து நடிகர் சூர்யா காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சூர்யாவை காலணியால் அடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்திருந்தார். இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவை அவமதிக்கும் வகையில் பேசிய இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது ரசிகர்கள் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
இது குறித்து அவர்களின் புகார் மனுவில், “இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தர்மா கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில், தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் சூர்யாவை காலணியால் அடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தருவார் என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார்.
அதனால் அவர் மீதும் சூர்யா புகைப்படத்தை கிழிப்பது, உருவபொம்மை கொளுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:நடிகர் சூர்யா குறித்து வன்முறை பேச்சு - நடவடிக்கை கோரி பால் முகவர்கள் சங்கம் புகார்