தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்' - பாலாவுடன் மீண்டும் இணைந்த சூர்யா - இயக்குநர் பாலாவின் படங்கள்

பாலா இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Bala
Bala

By

Published : Oct 28, 2021, 1:53 PM IST

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவர் ஆரம்ப காலத்தில் இயக்குநர் பாலா இயக்கிய 'நந்தா', 'பிதாமகன்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனிக்கப்பட்டார்.

இந்த இருவர் கூட்டணி தமிழ் திரையுலகில் வெற்றிக்கூட்டணியாக பார்க்கப்படுகிறது. தற்போது சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன், அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்', இதற்கிடையில் சிறுத்தை சிவாவுடன் புதியம் படம் என பிஸியாக உள்ளார்.

இந்நிலையில், மீண்டும் சூர்யா, பாலாவுடன் புதியப்படத்தில் நடிக்கவுள்ளார். இதனை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.

சூர்யா தனது ட்வீட்டில், " என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்...அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…"எனப் பதிவிட்டுள்ளார்.

நேற்று (அக்.27) சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் தனது 80ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலா கலந்துக்கொண்டார். அப்போது சிவகுமார், பாலாவுடன் சேர்ந்து சூர்யா புகைப்படம் எடுத்துக்கொண்டார். சூர்யாவின் இந்த பதிவையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் பிறந்தநாள் இன்று

ABOUT THE AUTHOR

...view details