தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய் விக் வைத்து நடித்தாரா? ரசிகரின் கேள்வியால் திக்கு முக்காடிய ஸ்ரீமன்! - விஜய்

நடிகர் விஜய் விக் வைத்து நடித்துள்ளார் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகர் ஸ்ரீமன் மழுப்பலான பதில் கூறியுள்ளார்.

விஜய் விக் வைத்து நடித்தாரா? ரசிகரின் கேள்வியால் திக்கு முக்காடிய ஸ்ரீமன்
விஜய் விக் வைத்து நடித்தாரா? ரசிகரின் கேள்வியால் திக்கு முக்காடிய ஸ்ரீமன்

By

Published : Mar 19, 2020, 8:08 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் விஜய் கருப்பு நிற கோட் சூட் அணிந்து கொண்டு பிகில் பட ராயப்பன் போல் ஹேர் ஸ்டைல் வைத்து கொண்டு மிகவும் மாஸாக வந்துதிருந்தார்.

வழக்கம் போல் விஜய்யின் கெட் அப்பை பலரும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீமன் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் லைவ் சாட்டில் உரையாடினார். அப்போது அவரிடம் நெட்டிசன் ஒருவர்,”விஜய் எதற்காக தலையில் விக் வைத்து நடிக்கிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ஸ்ரீமன், ‘விக் வைத்து நடித்திருக்கலாம், நடிக்காமலும் இருக்கலாம். அவர் எது செய்தாலும், படக்குழுவினரால் வடிவமைக்கப்பட்டது. ப்ரோ படம் பாருங்க. இப்போதைக்கு வேறு எதுவும் சொல்ல முடியாது. அதுவரை கரோனோவால் பாதிக்கப்பட்டவர்களாக பிராத்தனை செய்யுங்கள். மாஸ்டர் படத்தில் எங்கள் நண்பன் விஜய்யை உங்களுக்கு மிகவும் பிடிக்கும்'' என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஓவியம் வரையும் வீடியோவை வெளியிட்ட சல்மான் கான்!

ABOUT THE AUTHOR

...view details