தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஊரடங்கு முடிந்ததும் முதலில் வெளியாகும் படமாக 'மிருகா' இருக்கும் - மிருகா திரைப்படம் குறித்து நடிகர் ஸ்ரீகாந்த்

நடிகர் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் இயக்குநர் ஜே. பார்த்திபன் இயக்கியிருக்கும் திரைப்படம் 'மிருகா'. இத்திரைப்படம் குறித்தான தனது கருத்துகளை நடிகர் ஸ்ரீகாந்த் பகிர்ந்துகொண்டார்.

actor srikanth on miruga movie release
actor srikanth on miruga movie release

By

Published : May 17, 2020, 10:48 PM IST

இயக்குநர் ஜே. பார்த்திபன் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'மிருகா'.

இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,' 'மிருகா' படத்தின் படப்பிடிப்பு கரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு போடும் முன்பே முடிந்துவிட்டது. தற்போது, அனைத்துப் பணிகளும் முடிந்து திரைப்படம் வெளியாக தயாராக உள்ளது. ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியதும், திரையரங்குகள் திறக்கப்படும். அப்போது வெளியாகும் முதல் படமாக 'மிருகா' இருக்கும். மேலும், 'மிருகா' படத்திற்குப் பிறகு நானும், ஹன்சிகா மோத்வானியும் இணைந்து நடிக்கும் 'மஹா' படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப் படம் துப்பறியும் த்ரில்லராக உருவாகி வருகிறது. பாதி படம் முடிந்து விட்டது.

அதேபோல், நானும் நடிகர் விஜய் ஆண்டனியும் இணைந்து நடிக்கும் 'காக்கி' படத்தில் இரு கதாநாயகிகள் உள்ளனர். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்துஜாவும், எனக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையும் நடிக்கிறார்கள். ஆனால், அவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பும் கரோனா ஊரடங்கால் பாதியிலேயே நிற்கிறது. இந்தப் படம் சமுதாய சிந்தனையைக் கொடுக்கும் படமாக இருக்கும். எனக்கும், விஜய் ஆண்டனிக்கும் சரிசமமான பாத்திரங்கள். இது மிகவும் உணர்வுபூர்வமான படமாக இருக்கும்.

நடிகர் ஸ்ரீகாந்த்

அடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இதுவும் பாதியில் நிற்கிறது. இந்தப் படங்களுக்குப் பிறகு இன்னும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளேன். ஆனால், 144 தடை உத்தரவால் பாதியில் நிற்கும் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, பிறகு இந்தப் படங்களின் படப்பிடிப்பைத் தொடங்குவேன். நான் நடித்து வரும் ஒவ்வொரு படங்களிலும் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்கள் என்பதுதான் எனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயமாக இருக்குறது.

இதையும் படிங்க... ராய் லட்சுமியின் அதிரடியான ஆக்ஷனில் வெளியான ‘மிருகா’ டீஸர்

ABOUT THE AUTHOR

...view details