தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமீர் இயக்கத்தில் நடிக்கும் சூரி - soori upcoming movies

இயக்குநர் அமீர் இயக்கும் படத்தில் நடிகர் சூரி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமீர் இயக்கத்தில் நடிக்கும் சூரி
அமீர் இயக்கத்தில் நடிக்கும் சூரி

By

Published : Jan 12, 2022, 4:59 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் சூரி. தொடர்ந்து அவரது நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இதில் விஜய் சேதுபதி, சூரியின் தந்தையாக நடிக்கிறார். துணைவன் என்ற புதினத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் சூரி அடுத்ததாக ராம் பட இயக்குநர் அமீர் இயக்கத்தில் நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அமீர் முன்னதாக ஆர்யாவை வைத்து சந்தனத்தேவன் என்ற படத்தைத் தொடங்கினார். ஆனால் அப்படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

இதையும் படிங்க:'நாய் சேகர்' பட ரிலீஸ் தேதி வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details